”அந்தரங்க விஷயங்களை வெளியிடுவோம் என மிரட்டுறாங்க”-சிக்கந்தர், ரவுடிபேபி சூர்யா மீது யூடியூபர் புகார்

அந்தரங்க விஷயங்களை யூடியூப்பில் வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது கோவையைச் சேர்ந்த யூடியூப்பர் சித்ரா என்பவர் மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த யூடிப்பர் சித்ரா என்பவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த யூடியூப்பில் சிக்கந்தர் சம்பந்தமாக வெளியிட்டதால், ஆத்திரம் அடைந்த சிக்கா என்கிற சிக்கந்தர் தினமும் அவரது சேனல் மூலமாக கேலி செய்தும் தனது மகளின் அந்தரங்க விஷயங்களை வெளியிடுவதாகவும் கூறி மிரட்டல் விடுத்துவருவதாக மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் யூடிப்பர் சித்ரா புகார் அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் தான் இருப்பதாகவும் தனக்கு மிரட்டல் விடுத்த சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் சித்ரா, “யூடியூப் மூலம் ரவுடி பேபிசூர்யா, சிக்கந்தர், சாதனா உள்ளிட்டவர்கள் போடுகிற வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றது. அநாகரிகமான வீடியோ போடுவது, மிகவும் கொச்சையாக பேசுவதால் குழந்தைகள் அந்த வீடியோக்களை பார்த்து கெட்டு போறாங்க. இதை கண்டித்து கேட்டா மிரட்டல் விடுகின்றனர். யூடியூப் சேனல் வழியாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் மதுரை கமிஷனர் சந்தித்து புகார் கொடுத்து உள்ளேன். பெண்களை மூர்க்கமா தாக்குவது, ஆபாசமாக சேனலில் பேசுவது போன்ற செயலில் ஈடுபடும் சேனல்களை முடக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com