சென்னை | தயிர் பூரியில் கரப்பான் பூச்சி? ஷாக் ஆன கர்ப்பிணி! #Video

உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளித்த புகார் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னை பாண்டி பஜார் பகுதியில் ஹாட்சிப்ஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான நித்யா என்பவர் தயிர் பூரி (Dahi puri) வாங்கியுள்ளார். அதில், கரப்பான் பூச்சி இருந்ததாகக் கூறி உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். மேலும் இதனைச் சாப்பிட்டபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அந்தக் கடைக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கடை ஊழியர்கள், ’மின்விளக்கு ஒளியில் இருந்து வந்த பூச்சிதான் உணவில் இருந்துள்ளது’ எனக் கூறியுள்ளனர். இருப்பினும், சமையலறையைத் தூய்மையாகப் பராமரிக்கவில்லை எனக் கூறி உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com