நாமக்கல்: ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் - போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Vanitha
Vanithapt desk

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே உள்ள, கொல்லப்புரத்தான் தோட்டம் பகுதியைச் சேர்நதவர்கள் மணிகண்டன் - வனிதா தம்பதியர். இவர்களுக்கு கவிப்பிரியா என்ற ஏழு வயது பெண் சிறுமி உள்ளார்.

இந்நிலையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கவிப்பிரியாவின் கால்கள் இரண்டிலும் காயங்கள் இருந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

Kavipriya
Kavipriyapt desk

அதற்கு அந்த சிறுமி அம்மா தனக்கு சூடு வைத்ததாக கூறியுள்ளது. இது குறித்து தாய் வனிதாவிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமி மற்றும் தாயை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறும்போது, “கடந்த ஆறு மாதங்களாகவே இந்த வீட்டிற்கு சந்தேகப்படும் படியான வகையில் அதிகமான வெளி நபர்கள் வந்து செல்கின்றனர். இது குறித்து கேட்டாலும் வனிதா முறையான பதிலை தெரிவிப்பதில்லை. குழந்தையின் காலில் ஏன் இவ்வளவு காயங்கள் உள்ளது என கேட்டால் அதைக் கேட்க நீங்கள் யார்? அதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என எங்களையே மிரட்டும் தொனியில் பேசியதால்தான் நாங்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தோம்.. இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

leg
legpt desk

மேலும் இது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, “பொதுமக்களின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயையும் மகளையும் மீட்டு வந்துள்ளோம். சிறுமியிடம் விசாரித்த போது, எரியும் குப்பை தீயில் கால் வைத்ததால் தீப்புண் ஏற்பட்டதாக சிறுமி எங்களிடம் தெரிவித்தார். இதுகுறித்த புகார் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் சென்றுள்ளதால் அவர்கள்தான் மேல் விசாரணை செய்வார்கள். அவர்களிடம் சிறுமியை ஒப்படைக்க உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com