படிப்பில் போட்டி - மகளுடன் படிக்கும் மாணவனின் குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த பெற்றோர்

படிப்பில் போட்டி - மகளுடன் படிக்கும் மாணவனின் குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த பெற்றோர்

படிப்பில் போட்டி - மகளுடன் படிக்கும் மாணவனின் குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த பெற்றோர்
Published on

காரைக்காலில் படிப்பு போட்டியால் தனது மகனுடன் படிக்கும் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொடுத்ததாக சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்கால் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் காவலாளி கூல்டிரிங்ஸ் கொடுத்ததாகவும், அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவனை பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.

மேலும் பள்ளியில் சென்று விசாரித்தபோது மாணவனின் பெற்றோர்கள் கொடுத்த குளிர்பானம் மட்டுமே மாணவருக்கு வழங்கப்பட்டதாக பள்ளியில் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாங்கள் குளிர்பானம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் விசாரித்தபோது, மாணவன் பால மணிகண்டன் உறவினர் என ஒருவர் குளிர்பானம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானம் வழங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் மாலதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சகாய ராணி விக்டோரியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால மணிகண்டன் வகுப்பில் சிறந்த மாணவனாக உள்ளதால் சகாய ராணி விக்டோரியாவின் மகளுக்கும் சிறுவனுக்கும் போட்டி இருந்து வந்துள்ள நிலையில் குளிர்பானத்தின் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக தனது மகனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த பெற்றோரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com