தமிழ்நாடு
கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்
கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்
இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி, சுசீந்திரம் காவல்நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மற்றும் குரும்பூரிலும் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதே போல் நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் லாசரஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மோகன் சி லாசரஸ் மீது கோவை கருமத்தம்பட்டி, சூலூர் மற்றும் பொள்ளாச்சி காவல்நிலையங்களில் வழக்கு உள்ளது. இதுவரை அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.