
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் சீ லாசரஸ் இந்து கடவுள்களையும், கோயில்களையும் விமர்சித்து பேசுவதைப் போன்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அதனைக் கண்ட பாரதிய ஜனதா பிரமுகர் முருகேசன் என்பவர், கோவை கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளித்தார். அதேபோல் பொள்ளாச்சி காவல்நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மோகன் சி லாசரஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.
மூன்று காவல் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், மோகன் சி லாசரஸ் மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.