நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதில், திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அந்த புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன்; அனுப்பப்பட்டுள்ளது. அதில், விஜயலட்சமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.