வேங்கை வயலில் அனுமதியின்றி நுழைந்து வாக்கு சேகரித்ததாக நாதக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதி இன்றி நுழைந்து, பிரச்சாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் திருச்சி வேட்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன்
ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன்புதியதலைமுறை

செய்தியாளர் - முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பதாகை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சியினர், இதுவரையில் வேங்கைவயல் கிராமத்திற்குள் சென்று வாக்கு சேகரிக்கவில்லை.

இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், வேங்கைவயல் கிராமத்திற்குள் போலீசாரின் தடையையும் மீறிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன்
"விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து ஒரு வாய்ப்பு தாருங்கள்".. உருக்கமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதி இன்றி வாக்கு சேகரிக்க சென்றதாக அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வெள்ளனூர் காவல் நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது 143,171(E) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், இன்றோடு பரப்புரை முடிவடைகிறது.

ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன்
பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com