pt desk
CCTV footagept desk

தேனி: அரசு பேருந்தில் மாணவிகளை கேலி செய்த நபர்கள்... தட்டிக் கேட்ட பள்ளி மாணவன் மீது தாக்குதல்!

ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்தில் மாணவிகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு அரசு பேருந்தொன்று சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் பயணித்த மேக்கிழார்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் (மாணவர்கள், இளைஞர்கள் என பலரும்) பேருந்தில் பயணித்த சில மாணவிகளை கேலி செய்துள்ளனர். அதனை ஆண்டிப்பட்டி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

Govt bus
Govt buspt desk

இதனால், ஆத்திரமடைந்த மாணவிகளை கேலி செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பள்ளி மாணவனை அடித்து கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காயமடைந்த மாணவன், தன் பெற்றோர் உதவியுடன் ஏத்தகோவில் புற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

pt desk
முன்னாள் திமுக நிர்வாகி வீட்டின் முன்பு வாளுடன் சுற்றித் திரிந்த நபர் கைது – பரபரப்பு வாக்குமூலம்

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com