\
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது புகார்

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது புகார்

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது புகார்
Published on

புகார் கொடுத்து வந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெண் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசியதை கண்டித்து அவரது தாயார் சிறப்பு உதவி ஆய்வாளருடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் மாட்டுக் கறி சமைத்து வரச்சொல்லியதாகவும், தவறாக பேசியதாகவும் சிறப்பு உதவி ஆய்வாளர் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள், சிறப்பு உதவி ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com