சர்ச்சையான பெண் தொகுப்பாளர்: சிறுவனுக்கு ஆபாச மிரட்டல்!
நடிகர் சூர்யாவை விமர்சித்திருந்த சன் மியூசிக் தொலைக்காட்சியின் பெண் தொகுப்பாளர், சிறுவனை மிரட்டி ஆபாசமாகத் திட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் 11 வயது சிறுவன் ஃபதீன், தனது தந்தை அப்துல் ரஹ்மானுடன் காரில் சென்றுள்ளார். சிக்னலில் நின்றபோது, சன் மியூசிக் பெண் தொகுப்பாளர் வந்த கார் சிறுவன் அமர்ந்த கார் மீது வேகமாக மோதியது. சிறுவன் ஃபதீனும், அவரது தந்தையும் கீழே இறங்கி கேட்டபோது, அப்படித் தான் இடிப்போம் என மிரட்டியதுடன், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண் தொகுப்பாளர் மீது சிறுவனின் தந்தை, சென்னை கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொகுப்பாளர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடப்பதாகவும், எனினும் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புகாரில் சிக்கிய சன் மியூசிக் பெண் தொகுப்பாளர், ஏற்கெனவே நடிகர் சூர்யாவின் உயரம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார் என கூறப்படுகிறது.