குழந்தைகளை மிரட்டி வேலை வாங்கும் தலைமை ஆசிரியை
நெல்லையில் பள்ளி மாணவிகளை வகுப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது மருகால்குறிச்சி கிராமம். இங்கு இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 85 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் ஜெஸின்னா பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. அவர், பள்ளி நேரத்தில் வகுப்பறையை சுத்தம் செய்யவது, வளாகத்தை தூய்மைப்படுத்த சொல்வது போன்ற பணிகளை மேற்கொள்ள சொல்வதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பள்ளியை சுத்தம் செய்வதற்கு என்று ஒருவர் நியமிக்கபட்டுள்ளார். ஆனால் மாணவிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவிகளின் படிப்பை பற்றி கவலை படாமல் தன் பதவியை தவறான முறையில் செயல்படுத்தும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

