தமிழ்நாடு
பவழக்குன்றில் மீண்டும் பூஜை: நித்தி சீடர்கள் மீது மீண்டும் புகார்
பவழக்குன்றில் மீண்டும் பூஜை: நித்தி சீடர்கள் மீது மீண்டும் புகார்
நித்தியானந்தாவின் சீடர்கள், திருவண்ணாமலை பவழக்குன்று மலையில் மீண்டும் தடையை மீறி பூஜை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பவழக்குன்று மலையில் உள்ள பாறையில் அமர்ந்து இருந்தபோது நித்தியானந்தா ஞானம் பெற்றதாக கூறி, அந்த பாறைக்கு தினமும் 6 கால பூஜைகளை அவரது சீடர்கள் செய்து வந்தனர். பவழக்குன்று மலை பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால், அங்கு அமைக்கப்பட்டிருந்த குடில், கடந்த 16-ம் தேதி போலீசாரால் அகற்றப்பட்டு, நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நித்தியானந்தாவின் சீடர்கள் மீண்டும் அப்பகுதியை ஆக்கிரமித்து ஆறு கால பூஜையில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பூஜைகள் செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, நித்தியானந்தர் சீடர்கள் தெரிவிக்கின்றனர்.