\
அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருவதாக ஈபிஎஸ்மீது புகார்-தலைமை செயலாளருக்கு கடிதம்

அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருவதாக ஈபிஎஸ்மீது புகார்-தலைமை செயலாளருக்கு கடிதம்

அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருவதாக ஈபிஎஸ்மீது புகார்-தலைமை செயலாளருக்கு கடிதம்
Published on

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள அரசு பங்களாவில் அதிமுகவின் எம்எல்ஏகள் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் வரும் 17-ம் தேதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போவதாக ஊடகங்களிலும் செய்தி வெளியாக இருப்பதை கோவை செல்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகவே அந்த பங்களாவிலிருந்து செயல்பட வேண்டிய நிலையில் இப்போது அங்கு அதிமுக கட்சி அலுவலகமும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற அனுமதிக்க கூடாது என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் அங்க நடத்தக்கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com