“பணத்தை கொடு.. இல்லாட்டி வீடு கட்ட முடியாது” – முதியவரை தாக்கியதாக திமுக பிரமுகர்கள் மீது புகார்

சென்னை மடிப்பாக்கத்தில் புதிதாக வீடுகட்டி வரும் முதியவரிடம், இரு திமுக பிரமுகர்கள் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி தாக்கியதாக புகாரளித்துள்ளார்.
திமுக பிரமுகர்கள்
திமுக பிரமுகர்கள்புதிய தலைமுறை

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருபவர் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74). 14 வீடுகள் கொண்ட குடியிருப்பை, கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.

திமுக நிர்வாகி
திமுக நிர்வாகிpt desk

முடியும் தருவாயில் அக்குடியிருப்பு இருக்கும் நிலையில், 188வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்களான திமுக பிரமுகர்கள் விமல் என பெயர் கொண்ட இருவர் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர் எனக் கூறப்படுகிறது.

திமுக பிரமுகர்கள்
பாலியல் குற்றச்சாட்டு புகார்|பிரிஜ் பூஷன் சிங்கிற்குப் பதில் அவரது மகனுக்கு சீட்.. பாஜக அறிவிப்பு

ஏற்கெனவே இருமுறை மிரட்டிச் சென்ற அந்நபர்கள் நேற்று சென்று பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர். ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Hospital
Hospitalpt desk

இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் மீது முதியவர் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com