கொடைக்கானல்: சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளாரா நடிகர் பிரகாஷ் ராஜ்?

கொடைக்கானல் அருகே உள்ள சதுப்பு நிலத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகார் குறித்து தலைமை கணக்கு தணிக்கை குழு விரைவில் ஆய்வு செய்யவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேத்துப்பாறை அஞ்சு வீடு பகுதியில் பழங்குடியின மக்கள் செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பிரதமர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் அஞ்சு வீடு பகுதியில் பிரகாஷ் ராஜ் பெயரில் 7 ஏக்கருக்கு பட்டா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே அனுமதியின்றி நஞ்சை நிலத்தில் பிரகாஷ் ராஜ் வீடு கட்டி உள்ளதாகவும், சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

encroachment
encroachmentpt desk

மேலும் நடிகர் பாபி சிம்காவும் அப்பகுதியில் அனுமதியில்லாமல் 3 அடுக்கு மாளிகை கட்டி இருப்பதாக புகார் கூறியுள்ளனர். இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அகற்றப்படும் எனவும், பிரகாஷ் ராஜின் நிலம் குறித்த ஆவணங்களை விரைவில் தலைமை கணக்கு தணிக்கை குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com