தொடர்ந்து 3 ஆவது முறையாக போட்டி - கொளத்தூர் தொகுதியும், மு.க.ஸ்டாலினும்!

தொடர்ந்து 3 ஆவது முறையாக போட்டி - கொளத்தூர் தொகுதியும், மு.க.ஸ்டாலினும்!
தொடர்ந்து 3 ஆவது முறையாக போட்டி - கொளத்தூர் தொகுதியும், மு.க.ஸ்டாலினும்!

திமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவர், இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3 ஆவது முறையாக சென்னை கொளத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

முதல்வர் வேட்பாளரின் தொகுதி என்பதால் அதிக கவனம் பெற்ற நட்சத்திரத் தொகுதியாக கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பார்க்கப்படுகிறது. தொகுதி உருவாக்கப்பட்டு முதல் தேர்தல் நடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து பத்தாண்டுகளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை, கொளத்தூருக்கு முன்பாக, ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். 2011-ல் கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு அங்கேயே தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ஆதிராஜாராம் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பிறகு இவ்விருவரும் இந்த தேர்தலில் மீண்டும் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

கொளத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் கொளத்தூர் ஜே.ஆறுமுகமும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ் குமாரும் களமிறங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா போட்டியிடுகிறார்.

2009 முதல் 2011 வரை தமிழக துணை முதல்வராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின், 2006 ல் உள்ளாட்சித்துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், போன்ற பதவிகளை வகித்துள்ளார். திமுக இளைஞர் அணித் தலைவர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், பின்னர் 2017 ஆம் ஆண்டு திமுகவின் செயல்தலைவராக கட்சிப் பொறுப்புகளை வகித்த ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்குப்பின், திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com