முட்டை விலை உயர்வு நியாயம்தானா? ஒருங்கிணைப்புக் கமிட்டிக்கு நோட்டீஸ்

முட்டை விலை உயர்வு நியாயம்தானா? ஒருங்கிணைப்புக் கமிட்டிக்கு நோட்டீஸ்
முட்டை விலை உயர்வு நியாயம்தானா? ஒருங்கிணைப்புக் கமிட்டிக்கு நோட்டீஸ்

முட்டை விலை உயர்வு நியாயமானதுதானா என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டி நிர்வாகிகள் விளக்கமளிக்குமாறு போட்டி சமநிலை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

டெல்லியில் உள்ள இந்திய போட்டி சமநிலை ஆணையத்தில் சந்திரன் என்பவர் அளித்த புகாரில், “கள்ளச் சந்தை மிக அதிகமாக இருக்கிறது. பதுக்கல் அதிகமாக இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தாமாக விலை நிர்ணயத்தை செய்கிறார்கள். வட்டார ரீதியான முட்டை விலை நிர்ணய குழுக்கள் சரியாக செயல்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டி நிர்வாகிகள் வருகிற 30ஆம் தேதி நேரில் விளக்கமளிக்க போட்டி சமநிலை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், இந்திய முட்டை தொழிலின் அமைப்பு முறை என்ன? கடந்த 3 ஆண்டுகளின் சந்தை நிலவரம் என்ன? தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயத்தால் விவசாயிகள் அடையும் நன்மை என்ன? முட்டையின் தரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முக்கியமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ள முட்டை விலை நியாயமான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 30-ம் தேதி காலை 10.30 மணியன்று விசாரணை நடைபெறவுள்ளது. அந்த விசாரணையின் போது, புகார் அளித்த சந்திரன் குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 16-ம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com