தமிழ்நாடு
பவானி ஆற்றில் நீர் எடுத்தால் மோட்டார்களுக்கு சீல்
பவானி ஆற்றில் நீர் எடுத்தால் மோட்டார்களுக்கு சீல்
பவானி ஆற்றிலிருந்து நீர் எடுக்க தொழிற்சாலைகளுக்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இதை மீறும் நிறுவனங்களின் மின்மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வரை ஆற்றின் இருபுறமும் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுக்கும் 19 பெரிய தொழில் நிறுவனங்கள் உள்பட அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பவானி ஆற்று நீரைக்கொண்டு இயங்கிவந்த பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.