சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க குழு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க குழு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க குழு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Published on

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடல் அதிகாரி, காலநிலை பின்னடைவு நடைமுறை உலக வள நிறுவனத்தின் இயக்குனர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்ன என்பது பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அரசிற்கு அறிக்கை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com