\
முறைகேடு புகார்: சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்!

முறைகேடு புகார்: சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்!

முறைகேடு புகார்: சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்!
Published on

முறைகேடு புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு நீதியரசர் கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாளர் நியமனம், பொருட்கள் வாங்குவது என 208 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக சூரப்பா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை விசாரித்துவரும் நீதியரசர் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com