வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை
சிலிண்டர் விலைபுதிய தலைமுறை

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு
சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்
விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

வணிக சிலிண்டர் விலை உயர்வு

Chennai | Commercial Gas Cylinder
வணிக சிலிண்டர் விலை உயர்வு Chennai | Commercial Gas Cylinder

இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 26 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை
திருச்சி | பலமாக அடித்த ஆசிரியர்; மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி

இந்த விலை ஏற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் வணிக
பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,942 ரூபாயாக இருந்தது.  

அதேநேரம், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com