’மோடியை பார்த்து கேட்டு இருக்கலாமே எடப்பாடி!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

’மோடியை பார்த்து கேட்டு இருக்கலாமே எடப்பாடி!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
’மோடியை பார்த்து கேட்டு இருக்கலாமே எடப்பாடி!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஆதீன விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவது தவறு... எடப்பாடியின் குரல் சொந்தமாக ஒலிக்கும் குரலா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

அரசும் ஆதினங்கள் சம்பந்தப்பட்ட விவாகரங்களில் தலையிடு வது தவறு, அதே சமயம் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆதினங்கள் செயல்படுவது, தவறாகும்!! #மதம்சார்ந்த விஷயங்களில் "தேவையற்ற முறையில் கருத்து தெரிப்பது தவறான அணுகுமுறையாகும்

நிர்வாக தவறுகளை களைவதும் அனைத்து மக்களின் சமமான மேன்மையும் தான் அரசின் வேலை அதை செய்யும் அரசு நிர்வாகத்தை குறுகிய அரசியல் லாபத்திற்காக எதிர்ப்பது முறையல்ல.

எடப்பாடி என்றைக்குத்தான் சொந்த குரலில் பேசி இருக்கிறார். மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை தான் பேசியிருப்பார்

மத உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது - எடப்பாடி
முத்தாலாக், ஜிஹாப் உரிமையில் தலையிடமட்டும் உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது? என்று மோடிய பார்த்து கேட்டு இருக்கலாமே எடப்பாடி

நிச்சயமாக இது எடப்பாடியாரின் சுய சிந்தனை குரல் அல்ல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுடன் ஒன்றி போவதன் வெளிப்பாடு இது. வானதி சீனிவாசனின் குரலாக ஒலிக்கிறார் எடப்பாடி.

மக்கள் சொல்வதை தான் அவர் சொல்கிறார். மத விவகாரங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மூக்கை நுழைப்பது சரியல்ல என கூறுகிறார் . மேலும் அறநிலைய துறை இருக்க அவசியத்தையும் மறைமுகமாக சொல்கிறார். பிரச்சனை பெரிதானால் அறநிலைய துறை கலைக்கப்பட வேண்டிய நிலைக்கு போய்விடும் என்கிறார்.

இன்றைய தலைப்பு இன்று மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூகவலைதள பக்கத்தில் வெளியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com