சென்னையில் முதல் முறையாக Comic Con India..!

சென்னையில் முதல்முறையாக Comic Con இந்தியாவின் நிகழ்வு நடக்கவிருக்கிறது.
Comic Con India
Comic Con India Comic Con India

சர்வதேச அளவில் பலதரப்பட்ட காமிக் கிரியேட்டர்கள், ஆர்டிஸ்ட்டுகள், காமிக் தொழிற்சாலையின் நிர்வாகிகள் என பலர் சென்னையில் நடக்கும் நிகழ்விற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் காமிக் கான் இந்தியா நிகழ்வுகள் இதற்கு முன்னர் நடந்திருந்தாலும், சென்னையில் எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்திருந்தது. அதைப் போக்கும் வகையில் 2024ம் ஆண்டின் முதல் காமிக் கான் இந்தியா நிகழ்வை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்திலிருக்கும் சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) பிப்ரவரி 17,18 தேதிகளில் காமிக் கான் இந்தியா நிகழ்வு நடக்கிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 14,15ம் தேதி ஐதராபாத்திலும்; நவம்பர் 18,19ம் தேதிகளில் பெங்களூரிலும் ; 8,9,10ம் தேதிகளில் டெல்லியிலும் காமிக் கான் இந்தியா நிகழ்வுகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com