"தோற்றது போதும்  தலைமையேற்க வா தாயே" - மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டர்

"தோற்றது போதும் தலைமையேற்க வா தாயே" - மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டர்

"தோற்றது போதும் தலைமையேற்க வா தாயே" - மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டர்
Published on

தோற்றது போதும் எம்.ஜி.ஆர், அம்மா கட்டிகாத்த அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து அதிமுகவினரால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட்டை இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக அதிமுகவிற்கு தலைமை மாற்றம் தேவை எனவும், சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சென்னை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகரிலும், அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முனிஸ் என்ற அதிமுக தொண்டர் ஒட்டியுள்ள போஸ்டரில், தோற்றது போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை தோல்வியிலிருந்து மீட்க தலைமையேற்க வாருங்கள் தாயே என்ற வாசகங்களுடன் மாநகர முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com