\
"வாங்க தலைவா"- எம்.ஜி.ஆராக விஜயை சித்தரித்து போஸ்டர்..!

"வாங்க தலைவா"- எம்.ஜி.ஆராக விஜயை சித்தரித்து போஸ்டர்..!

"வாங்க தலைவா"- எம்.ஜி.ஆராக விஜயை சித்தரித்து போஸ்டர்..!
Published on

நடிகர் விஜயை எம்ஜிஆரின் மறு உருவமாக சித்தரித்து, 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் என குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் தேனி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தேனி பகுதியில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு வகையான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்தவகையில் தேனியில் இன்றும் நகரின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில் ரிக்க்ஷாக்காரன் படத்தில் எம்ஜிஆர் சைக்கிள் ரிக்க்ஷாவை இழுத்துச் செல்வதுபோல இருந்த புகைப்படத்திற்கு மாறாக விஜயை அதில் பொருத்தி விஜய் சைக்கிள் ஓட்டுவது போலவும் பின்னால் எம்.ஜி.ஆர் இருப்பது போலவும் வடிவமைத்துள்ளனர். மேலும் அதில் ”எம்.ஜி.ஆரின் மறு உருவமே” “ மாஸ்டர் வாத்தியாரே” என்றும் ”அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க 2021 ல் உங்கள் வரவை காணும் தமிழகம் “ வாங்க தலைவா” என்றும் எழுதியுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது தேனிப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com