பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்
பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்pt desk

”இதுக்கு ஒரு முடிவேயில்லையா!”| சென்னை மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்!

சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

'ரூட்டு தல' விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்து ஐந்து மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்த பேச்சு அடங்குவதற்குள் கல்லூரி மாணவர்களின் அடுத்த அராஜகம் அரங்கேறியுள்ளது.

பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்
பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்pt desk

சென்னை தியாகராய நகரில் இருந்து குன்றத்தூர் நோக்கி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே வந்த போது அந்த பேருந்தில் ஏறிய நந்தனம் கல்லூரி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம்
கரூர்: ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் - கொலை முயற்சியை முறியடித்த போலீசார்... 9 பேர் கைது!

இதையடுத்து பேருந்து கிண்டி மேம்பாலம் அருகே சென்ற போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறிய மாணவர்கள் நின்றுபடி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com