ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை
Published on

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர். மாற்று சமுதாயத்து பெண்ணை காதலித்த நிலையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோனீஸ்வரன். தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வந்த இவர், ஆர்எஸ் மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மாணவன் தோனீஸ்வரன் உடல் சடலமாக கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தோனீஸ்வரனின் உடலை மீட்டு அரக்கோணத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவன் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் அவரது அம்மா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரிடம் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவனை அடித்துக் கொலை செய்தார்களா அல்லது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com