கோழியை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய மாணவர் பலி

கோழியை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய மாணவர் பலி

கோழியை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய மாணவர் பலி
Published on

மதுரையில் கிணற்றில் விழுந்த கோழியை காப்பாற்ற இறங்கிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேவுள்ள காராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள மனோகரன் என்பவரது தோட்டக் கிணற்றில் கோழி ஒன்று விழுந்துள்ளது. அந்தக் கோழியை காப்பாற்ற நினைத்த சுரேஷ், கிணற்றில் இறங்கியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த எழுமலைப்பகுதி காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com