தமிழ்நாடு
2-வது மாடியிலிருந்து தலைக்குப்புற விழுந்த கார்: கல்லூரி மாணவி உயிரிழப்பு
2-வது மாடியிலிருந்து தலைக்குப்புற விழுந்த கார்: கல்லூரி மாணவி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 2-வது மாடியில் இருந்து கார் கீழே விழுந்ததில், கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் மலை மேட்டிற்கு ஏற்றவாறு வீடுகள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் முருகேஷ் என்பவரின் மகளான யமுனா, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து காரை கீழே இயக்கியுள்ளார். ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், தலைக்குப்புற கீழே விழுந்துள்ளது. இதில் யமுனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த யமுனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.