தீபாவளி இனிப்புகளை கவனமாக வாங்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கும் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், அதிகமான வண்ண நிறமிகள் உள்ள இனிப்புப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஈக்கள் மொய்க்கும் வகையில் இனிப்புகள் வைக்கப்பட்டிருந்தால், அதனை வாங்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இனிப்புகள் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், உணவுப்பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.