\
சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்
Published on

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com