தமிழ்நாடு
தந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
தந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
சென்னையை அடுத்த ஆவடியில், மகள்கள் அபகரித்த சொத்து மீட்கப்பட்டு மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்தவீட்டை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த வீடு, ராஜாவின் இரண்டாவது மகளின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து ராஜா, திருவள்ளூர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மகள்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வீட்டை ஏமாற்றி பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, மகள்கள் ஏமாற்றி பெற்ற அந்த வீடு மீட்கப்பட்டு தந்தை ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.