பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா - மாட்டுத்தாவணி சந்தையை மூட ஆட்சியர் உத்தரவு

பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா - மாட்டுத்தாவணி சந்தையை மூட ஆட்சியர் உத்தரவு

பழக்கடை உரிமையாளருக்கு கொரோனா - மாட்டுத்தாவணி சந்தையை மூட ஆட்சியர் உத்தரவு
Published on

மதுரை மாட்டுத்தாவனி பழச் சந்தையில் ஒருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பழச்சந்தையானது  மூடப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவனி மொத்த பழ சந்தையில் 242 மொத்த மற்றும் சில்லறை விற்பனை பழக்கடைகள் உள்ளன. இந்நிலையில் அங்கு 55 வயதுடைய பழக்கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோ பரவலை தடுக்கும் வகையில் பழ மார்க்கெட்டை மூட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவை ஏற்ற பழக்கடை உரிமையாளர்கள் 10 நாட்களுக்கு தற்காலிகமாக பழச் சந்தையை மூடுவதாக உறுதியளித்துள்ளனர். மாட்டுத்தாவணி சந்தையிலிருந்து சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மொத்த விற்பனையில் பழங்கள் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com