வடபழனி தீ விபத்து பற்றி விசாரணை: கலெக்டர் தகவல்

வடபழனி தீ விபத்து பற்றி விசாரணை: கலெக்டர் தகவல்

வடபழனி தீ விபத்து பற்றி விசாரணை: கலெக்டர் தகவல்
Published on

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச் செல்வன் கூறினார்.

சென்னை வடபழனி அருகே, தெற்கு சிவன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் கீழே இருக்கும் மின்சாரப் பெட்டியில் நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களில் தீப் பற்றியது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தன்ர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. பின்னர் தீயணைப்புப் படையினர், அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றனர். அப்போது முதல் தளத்தில் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் சஞ்சய் (வயது 3), சந்தியா (10) மற்றும் மீனாட்சி (60), செல்வி (35) ஆகியோர் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ‘இந்த தீ விபத்தில் 21 வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தீவிபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com