கையோடு வந்ததா தார்சாலை? அது போலியான செய்தி; நேரில் ஆய்வு செய்தபின் கரூர் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை

கரூர் மாவட்டத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சாலையானது கையோடுவந்தது என்று வீடியோ வெளியானதை அடுத்து அதனை நேரில் சென்று பார்த்து அதில் உள்ள உண்மைத்தன்மையை சரி பார்த்தார், கரூர் மாவட்ட கலெக்டர்.
கரூர் - தார்சாலை
கரூர் - தார்சாலைx

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டியில் இருந்து வீரசிங்கப்பட்டிக்கு செல்வதற்கென்று 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தார் சாலையானது தரம் சரி இல்லாமல் அப்படியே கையோடு வருகின்றது என்று சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

இதன் பின்னர் இச்சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்த கரூர் மாவட்ட கலெக்டர் சாலையின் தரம் குறித்தும் மற்றும் வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்த வீடியோவையும் அறிக்கையினையும் தனது x வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அந்தப் பதிவில், ”இது முற்றிலும் தவறான செய்தி. தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது. பொதுவாக தார் சாலை அமைக்கப்பட்டு இறுகுவதற்கு 48 -72 மணி நேரங்கள் வரை ஆகும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் - தார்சாலை
கரூர் - தார்சாலை

எனவே சாலையை மூலப்பொருட்களின் அடிப்படையில் ஆய்வு செய்யபட்டு அதன் மூலம் சாலையானது தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையின் மூலமாக கூறப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com