தமிழ்நாடு
புதுக்கோட்டை: மாவட்டத்தில் ஆபத்தான 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவு
புதுக்கோட்டை: மாவட்டத்தில் ஆபத்தான 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் சாஃப்டா் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்யவும், தரமற்ற கட்டடங்களை உடனடியாக இடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள 325 பள்ளிக் கட்டடங்களில் 100 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

