மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்

மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்
மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கல்லூரி என்பது போராட்டம் நடத்தும் களமல்ல என்றும், மாணவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் கோரிக்கையால் அக்கல்லூரி அரசுடமையாக்கப்பட்டது. எனினும், கல்லூரியில் தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காலவரம்பற்ற விடுமுறையை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மருத்துவம் படிக்க வந்த மாணவர்கள் கல்லூரியை போராட்டக்களமாக மாற்றக்கூடாது என்றும், தங்களது கோரிக்கையை அரசுக்கு மனுவாக கொடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com