ஆவினில் ஆக. 20 முதல் கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி அறிமுகம்

ஆவினில் ஆக. 20 முதல் கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி அறிமுகம்

ஆவினில் ஆக. 20 முதல் கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி அறிமுகம்

ஆவினில் ஏற்கனவே 150 உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அத்துடன் 10 புதிய பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்பட
உள்ளன.

ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் ஏற்கனவே 150 உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அத்துடன் 10 புதிய பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்பட
உள்ளன.

1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream)

2. வெள்ளை சாக்லேட் (White Chocolate )

3. குளிர்ந்த காஃபி (Cold Coffee)

4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets)

5. பாஸந்தி (Basundi)

6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix)

7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) 8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt)

9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit)

10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku )

பத்து பால் உபபொருட்களும் சென்னை அம்பத்துார் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நலன்கருதி தயார் செய்யப்பட்டுள்ள 10 ஆவின் உபபொருட்களை பால்வளத் துறை அமைச்சர் நாசர், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் வரும் 20ஆம் தேதி புதிய பால் உப பொருட்களை அறிமுகப்படுத்துகிறார்.

இதையும் படிக்க: சைவ உணவகத்தில் வாங்கிய பூரியில் புழு இருந்ததாக புகார் - அதிகாரிகள் சோதனை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com