\
வங்கதேச இளைஞரை பிடித்து கோவை போலீசார் விசாரணை

வங்கதேச இளைஞரை பிடித்து கோவை போலீசார் விசாரணை

வங்கதேச இளைஞரை பிடித்து கோவை போலீசார் விசாரணை
Published on

கோவையில் வங்கதேச இளைஞரைப் பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கோவையில் வங்கதேச இளைஞரை பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்தி பார்க் பகுதியில் உள்ள நகைப் பட்டறை ஒன்றில், பாரூக் கவுசீர் என்பவர் பணியாற்றி வருகிறார். வங்கதேசத்தை சேர்ந்த இவர், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பணியாற்றி வந்ததாக போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com