\
ஊசி போட்ட இளைஞர் மரணம்
ஊசி போட்ட இளைஞர் மரணம்எக்ஸ் தளம்

கோவை: வயிற்று வலிக்கு ஊசி போட்ட இளைஞர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு! என்ன நடந்தது?

கோவையில் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்திருக்கிறார். இவ்விஷயத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Published on

செய்தியாளர் - சுதீஷ்

கோவை சுல்தான்பேட்டை செஞ்சேரி மலையை சேர்ந்தவர் பிரபு (22) என்ற இளைஞர். இவருக்கு சம்பவ தினத்தன்று அதீத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனை செல்ல நினைத்தவர், அதே பகுதியில் உள்ள கிளினிக்கிற்கு சென்று மருத்துவரிடம் ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.

வயிற்று வலி
வயிற்று வலிகோப்புப்படம்

ஊசி போட்டுக்கொண்டவர், வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். ஆனால் சில நிமிடங்களில் இளைஞர் வீட்டில் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து மருத்துவரின் தவறான மருந்தால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் சந்தேகம் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதுடன் போலீசாருக்கும் தவவல் தெரிவித்துள்ளனர்.

ஊசி போட்ட இளைஞர் மரணம்
சேலம்: தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி கைது

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் மருத்துவரிடம் உரிய சான்றிதழ் இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 194 பி.என்.எஸ். பிரிவின்படி இளைஞரின் மரணம், சந்தேக மரணம் என சுல்தான்பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடல் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் இளைஞரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின் விசாரணை உரிய முறையில் நடத்தப்படும் என்ற உறுதியின்பேரில், உடலை வாங்கிச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com