passengerpt desk
தமிழ்நாடு
கோவை: ரயிலில் இருந்து தவறிவிழுந்த பெண் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலர்
கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (செப்.15) பிற்பகல் கோவையில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அப்போது அவசர அவசரமாக வந்த இரு பெண் பயணிகள் ரயிலில் ஏற முயன்றுள்ளனர். அதில் ஒரு பெண் பயணி ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
policept desk
இதையடுத்து ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு அந்த பெண் பயணியை நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதனிடையே துரிதமாக செயல்பட்டு பெண் பயணியை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல் துறையினரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.