கோவை: திடீரென அதிகரித்த நீரின் வேகம் - பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பரிதாப பலி

கோவை: திடீரென அதிகரித்த நீரின் வேகம் - பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பரிதாப பலி
கோவை: திடீரென அதிகரித்த நீரின் வேகம் - பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பரிதாப பலி

பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம் (60). இவர், தனது மருமகள் ஜமுனாவின் தாயார் வீட்டு கிரகப் பிரவேசத்திற்காக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வச்சினம்பாளையம் பகுதிக்கு நேற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை பாக்கியம் அவருடைய அண்ணன் பாலகிருஷ்ணன், மருமகள் ஜமுனா, உறவினர் மோனிகா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சகுந்தலா ஆகியோர் வச்சினம்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்று நீரின் வேகம் அதிகரித்து 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரை மீட்டனர். ஆனால், பாக்கியம், ஜமுனா சகுந்தலா ஆகிய 3 பேரும் நீரல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சகுந்தலாவின் உடலை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com