”பிரதமர் மோடி கோவையில் போட்டியிட வேண்டுமென்பதுதான் என்னோட விருப்பம்” - வானதி சீனிவாசன்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நமது செய்தியாளருடன் கலந்துரையாடினார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

”பிரதமர் நரேந்திர மோடி நம்ம தொகுதியில நின்றால் நல்லா இருக்குமே என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கு. அதனால் அவர், தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ள இடம் எது என்று பார்த்தால் பிஜேபி-க்கு ஆதரவுள்ள இடங்கள் நிறைய இருக்கு..

பாஜக வளர்ச்சி குறைவாக உள்ள இடத்தில் கூட பிரதமர் போட்டியிட்டால் அந்த இடத்திற்கான வெற்றி முழுவதுமாக பிஜேபி-க்கு மாறிவிடும். அப்படி அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் கோவையில் போட்டியிட வேண்டுமென்பதுதான் என்னோட விருப்பம்.

PM Modi
PM Modipt desk

தமிழகத்தில் அவர் போட்டியிடுவதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்க வாய்ய்பிருக்கிறது. தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் நேசிக்கக் கூடியவர் பிரதமர் மோடி. எந்த இடத்திற்குப் போனாலும் தமிழ் மொழியோட சிறப்பை பேசுபவர். தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிட்டால் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்” என்றார்.

பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...

”எந்த தொகுதியில் போட்டியிடனும், யார் போட்டியிடனும் என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். இதில், எங்களது விருப்பங்களைச் செல்லலாமே தவிர முடிவெடுக்க வேண்டியது கட்சியின் தலைமைதான்” என்றார்.

கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, வரும்போது பார்க்கலாம் என்று வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com