தமிழ்நாடு
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல் நிலையம் மற்றும் கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்களை சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுக்காக தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இதில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்திற்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளது.