கோவை: தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - தொழிலாளர்கள் 5 பேர் பலி!

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியினைச் சுற்றி பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணி மேற்கொண்டதுடன், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் 4 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். நான்கு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

உயிரிழத்த தொழிலாளர்கள் கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் ஆகியோர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பிபில்போயால் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போதைய தகவல்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேரில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com