கோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

கோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

கோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்
Published on

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில், சட்டத்திற்கு புறம்பாக குட்கா தயாரித்து வந்தது கண்டிபிடிக்கப்பட்டது. ‌ஆலையில் இருந்து மூட்டை, மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில், குட்கா தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்றிரவு 7 மணி அளவில் சோதனையைத் தொடங்கினர். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், மூட்டை, மூட்டையாக குட்கா மற்றும் குட்கா தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் மட்டு‌மன்றி பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் குட்கா அனுப்பட்டு வந்தது தெரியவந்தது. ‌இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் , சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆலை மேலாளர் ரகுராஜ் மற்றும் தொழிலாளர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசா‌ரணை நடைபெற்று வருகிறது. மேலும் தொழிற்சாலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள‌ குட்கா பொருட்களின் மதிப்பை கணக்கிடும் பணியில், உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா தயாரிக்கும் தொழிற்சாலையில் உண்மை நிலையை மூடி மறைக்‌க காவல்துறையினர் நடத்தும் நாடகம் எனக் கூறி ஆலை முன்பாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com