போலீசார் அதிரடி சோதனைpt desk
தமிழ்நாடு
கோவை | முக்கிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை..!
கோவையில் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர்: பிரவீண்
கோவையில் காவல் உதவி ஆணையர் தலைமையில், 2 காவல் ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 56 காவல்துறையினரை சொண்டு பேருந்து நிலையம், பார்சல் சர்வீஸ் சென்டர்கள், ரயில்வே தண்டவாள பகுதிகள், விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் கண்காணிக்கும் பொருட்டும், வெளியூர் மற்றும் வெளிமாநில சந்தேக நபர்களை தணிக்கை செய்யும் பொருட்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்பட்டது.
நீட் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை|தவெக ஆலோசனைக்கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றம்?
இதுபோன்ற திடீர் சோதனை, கோவை மாநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.