பெட்ரோல் விநியோகஸ்தர்களுக்கான ஏலத்தில் முறைகேடு - கோவை எம்.பி. நடராஜன் குற்றச்சாட்டு

பெட்ரோல் விநியோகஸ்தர்களுக்கான ஏலத்தில் முறைகேடு - கோவை எம்.பி. நடராஜன் குற்றச்சாட்டு
பெட்ரோல் விநியோகஸ்தர்களுக்கான ஏலத்தில் முறைகேடு - கோவை எம்.பி. நடராஜன் குற்றச்சாட்டு
கோவையில் பெட்ரோல் விற்பனை விநியோகஸ்தர்களுக்கான ஏலத்தில் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தக்கோரி பெட்ரோலிய அமைச்சகத்திடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மாவட்டத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கான விநியோகஸ்தர்கள் தேர்வுக்கான ஏலம், குலுக்கல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளராக கலந்துக்கொள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு கடந்த 9ஆம் தேதி கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அந்நிகழ்விற்காக குறித்த நேரத்தில் பி.ஆர்.நடராஜன் சென்றும், நிகழ்ச்சியின் நிறுவன அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக எம்.பி.யை தவிர்த்து, மாநில அரசு சார்பில் கலால் துறை தாசில்தாரும் சென்றார். இருவரும், சுமார் ஒருமணி நேரம் காத்திருந்தும் 3 நிறுவனங்களின் சார்பில் யாரும் வராததால் இந்நிகழ்ச்சி கண்துடைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரை அவமதிப்பதாகவும் கூறி பி.ஆர்.நடராஜன் அங்கிருந்த சில ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் காலதாமதமாக இன்று நடைபெற்றால் அதற்கான மன்னிப்பு கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த ஏலத்தில் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக கூறும் எம்.பி., நடராஜன், தேவைப்பட்டால் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com