`25 ஏக்கருள்ள மாப்பிள்ளை வீட்டார் முதல்ல வாங்க!’- வரன் பார்க்கும் நிகழ்வில் ஏற்பட்ட துயரம்

`25 ஏக்கருள்ள மாப்பிள்ளை வீட்டார் முதல்ல வாங்க!’- வரன் பார்க்கும் நிகழ்வில் ஏற்பட்ட துயரம்

`25 ஏக்கருள்ள மாப்பிள்ளை வீட்டார் முதல்ல வாங்க!’- வரன் பார்க்கும் நிகழ்வில் ஏற்பட்ட துயரம்
Published on

`15 ஏக்கர் வைத்துக்கொண்டு, காத்திருக்கீங்களா...?’ 

`25 ஏக்கர் வைத்துக்கொண்டு, காத்திருக்கீங்களா...?’ 

`சரி, 25 ஏக்கர் மொதல்ல வாங்க. வந்து உங்க ஜாதகம் கொடுங்க’

- இது ஏதோ ஏலம் விடும் நிகழ்வில் நடந்த பேச்சுவார்த்தையென நினைத்துவிட வேண்டாம். இது, இன்றைய தேதிக்கு திருப்பூரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் நட(ந்த)க்கும் சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற ஒரு சமூகத்தின் `நேரடி வரன் பார்க்கும் நிகழ்ச்சி’யில் பெண் வீட்டார்களின் எதிர்பார்ப்புகள் மலைப்பை ஏற்படுத்தியதாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில்தான் அவர் மேல்கூறும் நிகழ்வுகள் நடந்ததாக சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லும் தகவல்களின்படி, அந்நிகழ்ச்சிக்கு வரும் பெண் வீட்டார் `15 ஏக்கர் வைத்துள்ள வரன் பார்க்கும் ஆண்கள் ... 25 ஏக்கர் வைத்துள்ள வரன் பார்க்கும் ஆண்கள் ஜாதகம் கொடுங்க...’ என ஐபிஎல் ஏலம் போல வரன் பார்க்கும் ஆண்கள் பிரிக்கப்பட்டு, நிகழ்வு நடந்ததாக தெரிகிறது.

கோவையில் தனியார் மண்டபத்தில், ஒரு சமூகத்தை மட்டும் சேர்ந்த திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்கள் - பெண்கள் கலந்துகொண்டு, நேரடியாக அங்கேயே திருமணத்தை முடிவுசெய்யும் நிகழ்ச்சியை அச்சமூகத்தை சார்ந்தோர் ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்வதற்காக சென்ற மாப்பிள்ளையொருவரின் வீடியோதான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் தனது நண்பர்களிடம் பேசுகிறார். அவர்கள் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் அவர், “என்னண்ணா.... ஜாதகம் பார்க்குறதுக்கு வந்தா, இப்பிடி இருக்குது கூட்டம்... நம்ம ஜாதகமெல்லாம் உள்ள போகுமா? இல்ல எல்லாம் தண்ணியில அடிச்சுட்டு தான் போகுமா! நான் அப்பவே சொன்னேன்... நம்ம ஊர்லயே பொண்ணு பாத்துக்கலாம்னு. அதைவிட்டுட்டு, இங்க ஜாதகம் கொண்டு வந்து, இத்தனை கூட்டத்துல இப்ப நாம உள்ளே போவமானே தெரியல. அதுவும், உள்ளபூராவுமே பசங்க வீட்டுக்காரங்கதான் இருக்காங்க. பொண்ணு வீட்டுக்காரங்க ஒருத்தரைகூட காணோம். நம்ம ஜாதகமெல்லாம் உள்ளயே போகாது!

இதுல, `25  ஏக்கர் வைச்சிருக்கும் திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்கள் முதல்ல வாங்க’ என கேட்குறாங்க. அவ்ளோ வசதியிருந்தா நான் ஏன் இங்க வரப்போறேன்! இதலாம் எங்க போய் முடியபோகுதோ தெரியல. காலையில மழையோட மழையா பெட்ரோல் போட்டு இவ்ளோ தூரம் வந்ததுக்கு... ஒரு பிரயோஜனமும் இருக்காது போலயே... கிளம்பிடுவோமா நாமளே” என்றுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com